தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
தமிழக அரசு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்காக பாராட்டும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற புதிய வரலாற்று சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிதாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித பாலின பாகுபாடும் இன்றி இலவசமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.753 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், ஆண்டுக்கு 450 கிலோ தங்கம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெறப் பெற விரும்புவோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராகவும், அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு சுகாதார மையங்களில் பிரசவித்தவராகவும் இருக்க வேண்டும்.
குழந்தையை பெற்ற தாய்மார்கள் தங்களது கர்ப்ப அடையாள அட்டை மற்றும் தகுதி வாய்ந்த ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, இருப்பிட சான்றிதழ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு முறையின்படி, இரட்டை முக அங்கீகார அமைப்பு மற்றும் கருவிழி ஸ்கேன் மூலம் பயனாளிகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும். தாய் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது, PICME போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட தாயின் தனிப்பட்ட RCH ஐடி மூலம் தகுதி சரிபார்க்கப்பட்டு மோதிரம் வழங்கப்படும். அதன் பின் டிஜிட்டல் ரசீது மற்றும் பயோமெட்ரிக் ஒப்புகை நேரடியாக பதியப்படும்.
Edited by Siva
