1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader vijay won in two area

பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்கிலும் விஜய் வெற்றி!.. போட்றா வெடிய!..

vijay
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த தவெக  தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி, திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலையில், இன்று காலை 8 மணி முதலே சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் துவக்கம் முதலே தவெக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக 75 தொகுதிகளிலும், அதிமுக 51 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது..

ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 10 தொகுதிகள் மட்டுமே தேவை என்கிற நிலையில், அதிமுக போன்ற ஏதேனும் ஒரு கட்சியின் ஆதரவை பெற்று தவெக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்படுகிறது. இதையடுத்து விஜய் முதல்வராவதும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். 88305 வாக்குகளை விஜய் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனியோ இருதயராஜ் 51,464 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்திருக்கிறார்.

ஏற்கனவே, பெரம்பூர் தொகுதியில் விஜய் 1.12.719 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 62,307 வாக்குகள் பெற்று விஜயிடம் தோல்வி அடைந்திருக்கிறார். தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ஜெயக்குமாரை தோற்கடித்த ஆட்டோ டிரைவர்!.. ராயபுரத்தில் வெற்றி பெற்ற தவெக!..