1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Webdunia
Last Modified: திங்கள், 4 மே 2026 (16:04 IST)

செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல்ராஜன், மா சுப்பிரமணியன் தொகுதிகள் நிலவரம்..!

செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல்ராஜன், மா சுப்பிரமணியன் தொகுதிகள் நிலவரம்..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், கோட்டை என கருதப்பட்ட அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக, மதுரை மத்தி மற்றும் சைதாப்பேட்டை போன்ற முக்கிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளனர்.
 
மதுரை மத்தி தொகுதியில் தவெக வேட்பாளர் மதர் பதுருதீன் 44,647 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முக்கிய முகமான பழனிவேல் தியாகராஜன் 29,273 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமுகவின் சுந்தர் சி 22,412 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 
 
அதேபோல், சைதாப்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 55,958 வாக்குகள் பெற்று அசுர பலத்துடன் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் 35,209 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
கோவை தெற்குத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. செந்தில்குமார் 30,327 வாக்குகள் பெற்று, திமுகவின் வி. செந்தில் பாலாஜிக்கு (31,525) கடும் சவாலாக திகழ்கிறார். இருவருக்கும் இடையே சுமார் 1000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
 
தமிழகம் முழுவதும் அமைச்சர்களே திணறும் வகையில் வீசி வரும் இந்தத் தவெக அலை, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்கிறது.
 
Edited by Siva