ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜனவரி 2026 (14:19 IST)

நெருங்கும் தேர்தல்!. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!...

tvk vijay
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் வேகம் காட்ட துவங்கியிருக்கிறது. குறிப்பாக எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது? எவ்வளவு தொகுதிகள்? என்கிற பேரங்கள் துவங்கியிருக்கிறது. இதில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் விஜயின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடும் என தெரிகிறது. எனவே தமிழகத்தில் இந்த முறை நான்கு முறை போட்டி நிலவவிருக்கிறது.

விஜயின் தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை அது ஒரு புதிய கட்சி.. இன்னும் பல முக்கிய நிர்வாகிகளை அந்த கட்சி நியமிக்கவில்லை.. அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை கவனிக்க நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் வேலை சிறப்பாக நடக்கும். இந்நிலையில்தான், சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சார பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன், ஏ பார்த்திபன், பி. ராஜ்குமார், கே.வி. விஜய் தாமு, எஸ்.பி செல்வம், திருமதி கே பிச்சைரத்தினம் கரிகாலன், எம். செரவு மைதீன் என்கிற நியாஸ், ஜே கேத்தரின் பாண்டியன் ஆகியோர் பிரச்சார குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சார குழு 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் பிரச்சாரக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் எனவும் இந்த குழுவிற்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அணுகவேண்டும் எனவும் தலைமை அறிவித்திருக்கிறது.