வெள்ளி, 17 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜனவரி 2026 (12:51 IST)

பொங்கல்னு சொல்லிதானே சிபிஐகிட்ட லீவ் கேட்டீங்க!... ஏன் கொண்டாடல?!..

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த 2 வருடங்காளாகவே அரசியல்வதியாகவும் செயல்பட்டு வருகிறார். துவக்கத்தில் அவரை பனையூர் அரசியல்வாதி என நக்கலடித்தார்கள். ஆனால், தற்போது விஜய் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

ஒருபக்கம், கரூர் சம்பவம் காரணமாக சிபிஐ விசாரணையிலும் விஜய் சிக்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு நேரில் சென்று சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஆஜரானார். அப்போது சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் தொடர்பாக பல கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

அதன்பின் அடுத்தநாளும் சிபிஐ விசாரணைக்கு அவர் ஆஜராவதாக இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகை இருப்பதால் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும்.. பொங்கல் முடிந்து ஒரு நாளில் மீண்டும் விசாரணைக்கு வருகிறேன் என விஜய் சொன்னதால் சிபிஐ அதிகாரிகள் அதை ஏற்றுக்கொண்டனர். எனவே, அடுத்த நாளே சென்னை திரும்பினார் விஜய்.

ஆனால், இப்போதுவரை விஜய் பொங்கல் விழாவை கொண்டாடவில்லை. இது தொடர்பாக எந்த புகைப்படங்களை விஜயோ, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கங்களிலோ வெளியாகவில்லை. இதையடுத்து, கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய விஜய் ஏன் பொங்கலை கொண்டாடவில்லை. பிரதமர் மோடியே பொங்கலை கொண்டாடியபோது நீங்கள் கொண்டாடமாட்டீர்களா?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.