1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Support mla constitution become emply

18 தொகுதிகள் காலி என அறிவிப்பு - மீண்டும் தேர்தல் நடைபெறுமா?

TTV Support
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் வெற்றி பெற்ற 18 தொகுதிகள் காலி என அறிவிக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது.
 
அதேபோல், இன்று மாலைக்குள் சபாநாயகரின் நடவடிக்கை குறித்த செய்தி அரசிதழில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, அந்த 18 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் மீண்டும்  தேர்தலை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
ஜக்கையன் மீது ஏன் நடவடிக்கை இல்லை? விளக்கம் கொடுக்கும் எடப்பாடி அணியினர்!