திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (11:51 IST)

இன்னும் 90 சதவீதம் ரகசியம் உள்ளது; சசிகலா தரப்பினரை எச்சரித்த ஓபிஎஸ்

சசிகலா குடும்பத்தினர் இதோடு பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


 

 
நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. மலையுடன் மோதி தலை உடைந்து சிதறும் என எச்சரிக்கை விடுக்கிறேன். 
 
ஏற்கனவே சசிகலா குடும்பம் குறித்த ரகசியத்தில் 10 சதவீதம் சொல்லி உள்ளேன். இன்னும் 90 சதவீதம் ரகசியம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து என்னை ஏதாவது சொன்னால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடுவேன். இதனால் அவர்கள் பேச்சை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.