1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. NTA Warns Against NEET Paper Leak Rumours as Bihar Police Probe 'Munna Bhai' Style Exam Scam

நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை சொல்வது என்ன?

நீட் தேர்வு 2026
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 
 
Telegram போன்ற தளங்களில் இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்குவது குற்ற செயலாகும் என்றும் NTA தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில், கடந்த ஜூன் 21 அன்று நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய தேர்வு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்பட பாணியில் நடந்த இந்த அதிர்ச்சி மோசடியை விசாரிக்க பீகார் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு  12 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை  அமைத்துள்ளது. பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் இதில் போலி தேர்வர்களாக  செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்த மோசடிக்காக பயோமெட்ரிக் சரிபார்ப்பு ஊழியர்களின் உதவியுடன் '220' என்ற ரகசிய குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்து கொள்ள, இந்த ரகசிய குறியீட்டை பயன்படுத்தி போலி தேர்வர்கள் எவ்வித சந்தேகமுமின்றி தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்.. 4 நாளில் பிடிபட்டார்...