தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணம் சீன அரசின் சதி: சொன்னது யார் தெரியுமா?
- ரஜினி அப்படி கூறவில்லை : பா.ரஞ்சித் விளக்கம்
- உண்மை வெளிவரும்னு பயந்து தான் ஸ்டாலின் ஓடினார் - முதல்வர் பழனிசாமி
- ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசு கேவியட் மனு
- ரஜினியை டுவிட்டரில் கலாய்த்த நடிகர் சித்தார்த்துக்கு நெட்டிசன்கள் பதிலடி
காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா? டிடிவி தினகரன் கேள்வி!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று ரஜினிகாந்த் அங்கு சென்று மக்களை சந்தித்து அதன் பின்னர் பேட்டி அளித்தது தற்போதைய விவாத பொருளாக மாறியுள்ளது.
சமூக விரோதிகள்தான் கலவரத்திற்கு காரணம் என தமிழக அரசு மற்றும் ரஜினி கூறியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆர்கே நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் இதுகுறித்து பேசவுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, திமுக உறுப்பினர்கள் சட்டசபையை புறக்கணிக்காமல், சபைக்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சட்டசபையை நடத்துவது முதல்வருக்கு அழகல்ல.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை பலவீனமானது. உடனடியாக இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
தூத்துக்குடியில் சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்ததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எல்லாம் என்ன சமூக விரோதிகளா? இல்லை காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
