ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணம் சீன அரசின் சதி: சொன்னது யார் தெரியுமா?

Last Modified வியாழன், 31 மே 2018 (16:23 IST)
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்தும் தினந்தோறும் தனியார் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தலைப்புகளில் விவாதம் செய்பவர்களில் ஒருவர் ராமசுப்பிரமணியன்
 
ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளரான இவர் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்டபோது, இந்த ஆலையை மூட வேண்டும் என்று சீனா சதி செய்ததாகவும், இந்த ஆலையில் அதிக உற்பத்தி ஏற்பட்டால் தங்கள் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓக்களுக்கு பணம் கொடுத்து போராட்டத்தை தூண்டிவிட்டதாகவும் கூறினார்.
 
மேலும் சட்டநடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உண்மையே என்றும், ரஜினி கூறிய கருத்துக்கள் அனைத்தும் தனக்கு உடன்பாடு என்றும் ராமசுப்பிரமணியன் மேலும் கூறினார்இதில் மேலும் படிக்கவும் :