1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:55 IST)

ரஜினியை டுவிட்டரில் கலாய்த்த நடிகர் சித்தார்த்துக்கு நெட்டிசன்கள் பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடியில் சமூக  விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம் என்று கூறியதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல் நெட்டிசன்கள் வரை விமர்சனம் செய்து வருகின்றனர். போராட்டம் நடந்த போது ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களை சமூக விரோதிகள் என்று அழைக்காமல் அவர்களை தியாகிகள் என்றா அழைக்க முடியும்? 
 
அப்பாவி பொதுமக்களையும் போராட்டக்காரர்களையும் ரஜினிகாந்த் விமர்சிக்கவில்லை. கல்வரம் செய்தவர்களை மட்டுமே விமர்சித்துள்ளார் என்ற அடிப்படையை கூட புரிந்து கொள்ளாமல் ரஜினியை வேண்டுமென்றே தூற்றி வருவதாக அரசியல் விமர்சகர்கள் டுவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஹிட் படம் கொடுக்காமல் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்தே ஒதுக்கப்பட்டுவிட்ட நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் ரஜினியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 
 
இத்தனை நாட்களாக தூத்துக்குடியை மாசுபடுத்தியது சமூக விரோதிகள் என அடுத்து கூறுவார்கள்' என்று சித்தார்த் ஒரு டுவீட்டில் கூறியுள்ளார். சித்தார்த் புரிந்து தான் இந்த டுவீட்டை போட்டுள்ளாரா? என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக தூத்துக்குடியை மாசுபடுத்தியது ஸ்டெர்லைட் நிறுவனமே என்பதால் அவர்களும் சமூக விரோதிகள் தானே! இவர் ரஜினியை கலாய்ப்பதாக நினைத்து கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக டுவீட் போட்டிருப்பதாக பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.