வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (13:26 IST)

உண்மை வெளிவரும்னு பயந்து தான் ஸ்டாலின் ஓடினார் - முதல்வர் பழனிசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் பங்கு வெளியே தெரிந்துவிடும் என்பதால் தான், ஸ்டாலின் சட்டசபையில் இருந்து வெளியேறினார் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரத்திற்கு, அதிமுக தான் காரணம் என ஸ்டாலின் தெரிவித்து வந்த நிலையில், தமிழக சட்டசபையில் துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறி ஸ்டாலின் வெளிநடப்பு செய்து தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை நடத்தி வருகிறார்,
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிசாமி, 2010-ல், ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக  இருந்தபோது தான், ரூ.1500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
எல்லாம் செய்துவிட்டு ஸ்டாலின் இப்பொழுது அதிமுக மேல் பழிபோடுவது மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார். இந்த மாதிரியான கேள்வி எழுப்பப்பட்டு உண்மை வெளிவந்து விடும் என்பதற்கு பயந்து தான் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார் என முதலமைச்சர் கூறினார்.