1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai high court warning tvk government

ஜூலை 31ம் தேதியே புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி...

arul vignesh
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் ‘பெண் கலெக்டர் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியிருந்தார். ஆனால் பெண் கலெக்டர் புகார் அளித்ததாக எந்த செய்தியும் வரவில்லை. நேற்று கூட இது தொடர்பான வழக்கில் பெண் அதிகாரி எந்த புகாரும் அளிக்கவில்லை என காவல்துறை சார்பில் சொல்லப்பட்டிருந்தது..

இந்நிலையில் பெண் கலெக்டர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்திருப்பதாக இன்று காலை செய்திகள் பரவியது. மேலும் பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

அப்போது ‘மாவட்ட ஆட்சியர் ஜூலி 31ம் தேதியே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் ஆட்சியர் புகார் அளித்திருக்க மாட்டார்.. இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள்’ என நீதிபதிகள் கோபத்துடன் கூறினர்..

மேலும் இந்த வழக்கை எஸ்.பி விசாரிக்க கூடாது. ஐஜி விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும், ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சிறுமிகள் முன்பு ஆபாச செய்கை!.. கும்கி பட நடிகருக்கு ஒரு வருட சிறை!..