1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. lady collector complaint against tvk mla arul vignesh

தவெக எம்.எல்.ஏ மீது பெண் கலெக்டர் புகார்?.. தவெக அரசுக்கு கடும் நெருக்கடி!...

arul vignesh
சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என செய்திகள் பரவியது. ஆனால் இதுபற்றி அந்த பெண் கலெக்டர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. காவல் நிலையத்திலும் அவர் எந்த புகாரும் அளிக்கவில்லை. மேலும் இந்த செய்தியில் உண்மையில்லை என அருள் விக்னேஷும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் ‘கலெக்டர் புகார் அளித்தால் கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும்’ என கூறியிருந்தார். அதன்பின் அருள் விக்னேஷை நேரில் அழைத்து முதல்வர் ஜோசப் விஜய் கண்டித்ததாக செய்திகள் வெளியானது..

இந்நிலையில் அந்த பெண் கலெக்டர் அருள் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் அளித்திருப்பதாக இந்து நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அதிமுக பொதுச் யலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டனர்..

ஏற்கனவே கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் தகவலை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. எனவே எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன மாதிரியான நடவடிக்கையாக இருக்கும்? அவரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
என்விடியா நிறுவனத்தின் சி.இ.ஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங்.. டிரம்ப், எலான் மஸ்க் வரவேற்பு..