1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Traffic change in chennai tomorrow

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னை
காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் சென்னையில் நாளை அதாவது அக்டோபர் 21ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி, நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால், கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது,
 
 சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம், எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
 
MRTS X R.K.Salai Jn-ஐ தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது, காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை - காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். 
 
மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து(21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் - மியூசிக் அகாதெமி பாயின்ட் - TTK சாலை - இந்தியன் வங்கி Jn - ராயப்பேட்டை நெடுஞ்சாலை - GRH பாயின்ட் - அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 
 கதீட்ரல் ரோடு லைட் ஹைவுஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து (27 D) V.M. தெருவில் திருப்பிவிடப்பட்டு - லஸ் சந்திப்பு - லஸ் சர்ச் சாலை - D' ஸ்லிவா சாலை - பக்தவச்சலம் சாலை - Dr. ரங்கா சாலை - பீமனா கார்டன் jn - CP ராமசாமி சாலை - சீனிவாசன் தெரு - RK மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 
காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!