சென்னை மக்களே ரெடியா? ’கங்குவா’ இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. மேலும், 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதுடன், 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ஓடிடியில் இடம்பெற்றுள்ளன. இப்படம் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 26ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Edited by Siva