தொடர்புடைய செய்திகள்
- எதிர்க்கட்சி கூட்டணிக்கு INDIA என்று பெயர்.. நிதிஷ்குமார் அதிருப்தி என தகவல்..!
- பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே இருப்போம்- மாயாவதி
- அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
- சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தை கையில் எடுக்கும் ஆர் ஜே பாலாஜி!
- இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் GoBackStalin ஹேஷ்டேக்.. என்ன காரணம்?
ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தவுள்ளோம்: டிஆர் பாலு
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருப்பதை அடுத்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் எம்பிக்கள் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சி சார்பில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றவும் எதிர்கட்சிகள் சார்பில் மணிப்பூர் கலவரம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பவும் தயாராகி வருகின்றனர்.
தமிழக எம்பிக்களை பொருத்தமட்டில் மேகதாது அணை விவகாரம் மற்றும் ஆளுநர் ரவி விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்டனர்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர் பாலு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.
Edited by Mahendran
