திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (17:52 IST)

இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் GoBackStalin ஹேஷ்டேக்.. என்ன காரணம்?

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூர் சென்று இருக்கும் நிலையில் இந்திய அளவில் GoBackStalin  என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்திற்கு தமிழக மாநிலத்திற்கும் மேகதாது அணை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லக்கூடாது என அண்ணாமலை உள்பட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
 
ஆனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் GoBackStalin  என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. 
 
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதா? என்று  எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பாட்னாவில் நடந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்ட போதும் GoBackStalin  என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran