திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (17:42 IST)

மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தவில்லை: அண்ணாமலைக்கு தமிழக அரசு விளக்கம்..!

Pregnant
கர்ப்பிணிகளின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முடக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது என்றும், அந்த நிதி கர்ப்பிணிகளுக்கு சென்று சேரவில்லை எனில் அந்த நிதி எங்கே செல்கிறது? "எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதில் கூறிய தமிழக அரசின் சுகாதாரத்துறை, ‘தமிழகத்தில் மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும், மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளால் காலதாமதம் ஆகிறது என்றும், தமிழக அரசின் 'PICME 2.0' இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
மேலும் நிலுவையில் உள்ள மகளிருக்கு விரைவில் மகப்பேறு நிதி உதவி வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran