1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Nitiesh kumar not liked INDIA name for opposites

எதிர்க்கட்சி கூட்டணிக்கு INDIA என்று பெயர்.. நிதிஷ்குமார் அதிருப்தி என தகவல்..!

இந்தியா
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பெயருக்கு நிதிஷ்குமார் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பெங்களூரில் நேற்று நடந்த இருபது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் புதிய எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டது.  இந்த பெயரை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் விரும்பவில்லை என்றாலும் இந்த பெயரை பரிந்துரை செய்தது மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்கரே என்று கூறப்படுகிறது 
 
இந்தியா என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணியை குறிக்கும் என்டிஏ இருப்பதை சுட்டிக்காட்டிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வேறு பெயரை வைக்கலாம் என்று கூறியதாகவும் ஆனால் மற்ற தலைவர்கள் இந்தியா என்ற பெயர் வைக்க ஆதரவு தெரிவித்ததால் வேறு வழி இன்றி நிதீஷ் குமார் அதனை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முக்கிய பங்காற்றிய நிதீஷ் குமார் இந்தியா என்ற பெயரால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தேர்தல் பிரச்சாரத்தில் VOTE For INDIA என கூறிய மோடி.. பழைய வீடியோ வைரல்..!