தொடர்புடைய செய்திகள்
- அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வைத்து மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறார்கள்- கொ.இ.பேரவை கார்வேந்தன்
- செந்தில் பாலாஜியை அடுத்து பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
- செந்தில் பாலாஜி வழக்கில் ஸ்டாலினை சாட்சியாக சேர்க்க வேண்டும்: டாக்டர் ஷியாம் கிருஷ்ணமூர்த்தி..!
- செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!
- செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தாமதம்: என்ன காரணம்?
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு அவர் பெற்றுள்ளார் என்றும் இதனை அடுத்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் ஒரு மாதம் முழு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் அமலாக்கத்துறை விசாரணையில் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
