ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (11:28 IST)

செந்தில் பாலாஜி வழக்கில் ஸ்டாலினை சாட்சியாக சேர்க்க வேண்டும்: டாக்டர் ஷியாம் கிருஷ்ணமூர்த்தி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சாட்சியமாக சேர்க்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். 
 
போக்குவரத்து துறை ஊழல் குறித்த செந்தில் பாலாஜியின் வழக்கு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கில் அமலாக்க துறை செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் போக்குவரத்து துறை ஊழல் குறித்து ஆதாரங்களை சேகரித்து கட்அந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவரான மு க ஸ்டாலின் வெளியிட்டார். 
 
எனவே இந்த வழக்கில் அவரை சாட்சியமாக சேர்க்கப்பட்டு அமலாக்கத்துறை மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என டாக்டர் ஷியாம் கிருஷ்ணமூர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran