ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (13:11 IST)

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தாமதம்: என்ன காரணம்?

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விவரங்களை அமலாக்கத்துறை சேகரித்து வருவதாகவும், மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியதால் இந்த நிலை என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் கடந்த 3 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை சேகரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் அளித்த விவரங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஆயத்தம் செய்து வருவதாக தெரிகிறது.
 
Edited by Siva