1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow people not allowed in marina beach

நாளை மெரீனா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை.. என்ன காரணம்?

சென்னை
நாளை சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார் என்பதும் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துவிட்டு அவர் முதுமலை செல்லவுள்ளார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நாளை பிரதமர் வருகையையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 
 
அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலாக அவர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு நாளை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி? பாஜக கூட்டணியில் சீட் வழங்கப்படுகிறதா?