செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:14 IST)

குறைகிறது சமையல் கேஸ் விலை: பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!

சமையல் கேஸ் விலை தற்போது ரூ.1000 க்கும் அதிகமாக விற்பனை ஆகி வருவதை அடுத்து சமையல் கேஸ் விலையை குறைக்க பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் கேஸ் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் வீடுகளுக்கான சமையல் கேஸ் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் ஆகியவை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் கேஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் சமையல் கேஸ் விலையை நிர்ணயிக்கவும் ஒவ்வொரு மாதமும் சமையல் கேஸ் விலையை பரிசீலனை செய்யவும் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் சமையல் கேஸ் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva