1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomato price increasing tamilnadu

கிலோ தக்காளி ரூ.120; விண்ணை முட்டும் விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Tomato
தமிழகத்தில் தக்காளி வரத்து குறைவால் பல பகுதிகளிலும் விலை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் தற்போது வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்