வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (00:41 IST)

அசாம் மாநிலத்தில் மழை வெள்ளம்...25 பேர் பலி..8 லட்சம் பேர் பாதிப்பு

assam flood
அசாம் மா நிலத்தில்  மழை வெள்ளத்தால் சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மா நிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில், சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், கவுகாத்தி வானிலை மையம் வரும் நாட்களில் இப்பகுதியில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது.

மேலும், அசாம் மாநிலத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.