1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 மே 2022 (10:15 IST)

கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

college students
கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
அனைத்து கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 கல்லூரிக்கு வரும் மாணவர்கள், மாணவியர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் திரளாக கூடுவதை தவிர்க்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது