ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:14 IST)

ஆதார் - மின் எண் இணைப்பு.. இன்றே கடைசி நாள்!

aadhar eb
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது என்பதும், அதன் பின்னர் மக்கள் ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைத்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே 
 
அனைத்து மின் அலுவலகங்களிலும் இதற்காக தனியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண் மற்றும் மின் எண் இணைக்கப்படும் என்றும் அறிவிக்க பட்டிருந்தது 
 
இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி கடைசி தேதி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்றுடன் அந்த கால அவகாசம்  முடிவடையும் நிலையில் இதுவரை மின் எண்ணை ஆதார் எண்ணுடன்  இணைக்காதவர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் 
 
மேலும் https://www.tnebitd.gov.inbillstatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் சென்று தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் மின்சார துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva