செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (19:24 IST)

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

aadhar eb
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவகாசம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மின் எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இணைத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதால் பிப்ரவரி 28 வரை மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படும் என்றும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran