செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (14:16 IST)

எலக்ட்ரிக் எண்ணை அடுத்து இதையும் ஆதாருடன் இணைக்க வேண்டும்: தமிழக அரசு

Kisan Farmers
எலக்ட்ரிக் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பதும் இதற்கான கடைசி தேதியில் ஜனவரி 31 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 
 
இதனை அடுத்து தற்போது வந்த புதிய தகவலின் படி பிரதமர் மந்திரியின் கிசான்  திட்டத்தின் கீழ் உதவி பெறவும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆதார் எண்ணுடன் பிரதமரின் கிசாn திட்டத்தில் இணைத்தவர்களுக்கு மட்டுமே 13வது தவணைத் தொகை விடுவிக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் உழவர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவி பெற்று வரும் பயனாளிகள் உடனடியாக தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran