1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சட்டமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கை மீது விவாதம்!

anbil
சட்டமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
இந்த விவாதத்தின்போது ஆசிரியர் தகுதி தேர்வு, வினாத்தாள் கசிந்த விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தனித் தீர்மானம்  இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி ஆகியோர் பதிலுரை அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு  இருப்பதாகவும் கூறப்படுகிறது.