வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (22:24 IST)

அனைத்து பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டி – சென்னை மேயர் அறிவிப்பு

chennai mayor priya
சென்னை   மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேயர் பிரியா முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 23 பள்ளிகளில் தன்னார்வலர்கள்  உதவியுடன் சோதனை முறையில் வழங்கப்பட்டு வந்த காலை சிற்றுண்டிகள் இனி அனைத்து பள்ளிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என சென்னை மேயர் பிரிய அறிவித்துள்ளார்.

அதில்,சென்னைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காபு பயிற்சி அளிக்கப்படும், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும், மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும்,  சென்னை மா நகராட்சியில் இலவச நாப்கிங்கள் வழங்குகள் கழிவறை வசதிகளை மேம்படுத்த ரூ.23.66 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.