1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (07:50 IST)

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு: சூப்பர் தகவல்!

school
மாநகராட்சி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை உயர்ந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
நடப்பு கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக 25 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டு 90,000 என இருந்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தற்போது 1.15 லட்சமாக அதிகரிப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது
 
தனியார் பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.