திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:34 IST)

ஒரே நாளில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

Bomb
பெங்களூரில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
பெங்களூர் உள்ள ஏழு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட ஏழு பள்ளிகளுக்கும் சென்று போலீசார் சோதனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை செய்ததில் எந்த விதமான வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் எனவே புரளியாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த மின்னஞ்சல் அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்