தமிழகத்தில் கனமழை!.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில்தான் இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல், தமிழ்நாடு கடற்கரை பகுதியில் ஒரு புயல் உருவாகியிருக்கிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களும் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்த. 17 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், கோவை, மதுரை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

