வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (20:35 IST)

பால், மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் - மாநகராட்சி அறிவிப்பு !!

பால், மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் - மாநகராட்சி அறிவிப்பு !!

சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் சுமார் 150 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தகவல்கள் வெளியாகிறது.
 
 
இந்நிலையில், சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது,
 
மருத்துவக் குழு கண்காணிப்பில், இருக்கும் இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த கொரோனா வைஸால் பாதிக்கப்பட்டவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் அவர் சென்னை ராஜீவாந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், மேலும், சென்னையில் மளிகை,பால், காற்கறிகள், கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
அத்தியாவசியப் தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்த உத்தரவும்  பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.மேலும், மளிகை, பால், காய்கறி கடைகள் மூடப்படும் என தவறான வதந்திகள் பரப்படுகின்றன, இவ்வாறு வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.