ஆபாசமாக பேசிய மேனேஜர்; சரவணா ஸ்டோர்ஸ் சீல் வைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
மாநகராட்சி மண்டல அதிகாரிகளை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் மேனேஜர் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கொச்சையாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31 ஆம் தேதி வரை மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், அரசின் உத்தரவை மீறி புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இருபினும் இந்த எச்சரிக்கையையும் கண்டுக்கொள்ளாத காரணத்தால் சரவணா ஸ்டோர்ஸ் சீல் வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்நிலையில் தற்போதைய தகவல் என்னவெனில், எஅச்சரிக்க சென்ற அதிகாரிகளிடம் சரவணா ஸ்டோர் கடையின் மேலாளர் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி கொச்சையாக பேசியுள்ளார். இதன் பின்னர் போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மேலாளர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், முறையற்று தடுத்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.