செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 18 மார்ச் 2020 (21:37 IST)

பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட பாஜக பிரமுகர் !

பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட பாஜக பிரமுகர் !

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் தன்னை மர்ம நபர்கள்  தாக்கியதாக பொய் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
 
திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளர் ராமன் பகவான்.
 
மர்ம நபர்களை இவரை அரிவாளால் வெட்டிவிட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்திருந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
அதில், பகவான் தனது ஓட்டுநர் உதவியுடன் அரசியல் ஆதாயத்திற்காக  தன் கையை தானே வெட்டிக்கொண்டது தெரியவந்தது.
 
கட்சியில் உயர் பொறுப்பு பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.