1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC Group 2 & 2A Prelims Held: Over 92,000 Candidates Absent for Exam

இன்று TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு: 92,000-க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட்..

TNPSC Group 2 Exam 2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  சார்பில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று  1) மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.
 
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,647 தேர்வு மையங்களில் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெற்றது. காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இத்தேர்வுக்கு மொத்தம் 4,89,885 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஒரு பணியிடத்திற்குச் சராசரியாக 579 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும், இன்று நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்தவர்களில் சுமார் 92,595 பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 3,97,293 தேர்வர்கள் மட்டுமே இத்தேர்வை எழுதியுள்ளனர்.
 
அரசு வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சுமார் 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வராதது தேர்வர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பிரத்யேக தகவல்கள்..