திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

தேர்வு மையங்களில் குளறுபடி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அதிரடியாக ஒத்திவைப்பு!

தேர்வு மையங்களில் குளறுபடி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அதிரடியாக ஒத்திவைப்பு!
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், பல்வேறு மையங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை திருவல்லிக்கேணி மாநில கல்லூரியில் 821 தேர்வர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில், காலையில் மிக குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்களே வந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
மேலும், அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் சரியாக ஒதுக்கப்படாததால் கடும் குழப்பம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானதால், சரியான இடத்திற்கு செல்ல முடியாமல் தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். 
 
இந்த தொடர் குளறுபடிகளால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தேர்வை ஒத்திவைப்பதாக தேர்வாணைய தலைவர் அறிவித்துள்ளார். மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களாகத் தயாராகி வந்த தேர்வர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
Edited by Siva