வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (16:54 IST)

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயலின் நகர்வு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குப் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
 
கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran