வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (13:37 IST)

Cyclone Ditwah: டிட்வா புயல் எதிரொலி!.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!...

Cyclone Ditwah: டிட்வா புயல் எதிரொலி!.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!...
டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பாண்டிச்சேரி, கடலூர், திருவாரூர், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களிலும் பல மணி நேரங்கள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, அதிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 30 மணி நேரத்திற்கு மேலாக  மழை பெய்து வருகிறது. இதனால் அங்கே கடும் குளிர் வீசி வருகிறது.
இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும் கன மழை பெய்யும் எனவும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் எனவும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
 
அதேபோல் நாளையும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.