வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (14:24 IST)

டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!

டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடலோர பகுதிகளில் தொடர் கனமழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் 123 பேர் பலியாகியுள்ளனர். இந்த தீவிர பேரிடர் சூழலில், அங்கு சிக்கி தவிக்கும் அல்லது சிரமங்களை எதிர்கொள்ளும் இந்தியர்களுக்கு உடனடியாக உதவுவதற்காக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இதன் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம் சார்பில் ஒரு அவசர உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம், விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
மேலும், இலங்கையின் எந்த பகுதியிலும் சிக்கலை சந்திக்கும் இந்தியர்கள் உதவி பெறுவதற்காக ஒரு அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரமத்தில் உள்ள இந்தியர்கள் +94773727832 என்ற எண்ணை, வாட்ஸ்ஆப் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் தொடர்புகொண்டு உதவியை பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புப் படையையும் நிவாரண பொருட்களையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran