புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (13:37 IST)

நெருங்கி வரும் டிட்வா புயல்.. சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை..!

நெருங்கி வரும் டிட்வா புயல்.. சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை..!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல், தமிழக கடலோரத்தை நெருங்கி வருவதால், இன்றும்  நாளையும் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயல் வேதாரண்யத்திலிருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் மழை எச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உட்பட 13 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நாளை  திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், டிசம்பர் 1 ஆம் தேதி திருவள்ளூருக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
புயல் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran