1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt suspend road dept officers

ரோடு போடாமல் மோசடி; அதிமுக புகார்! – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை!

ரூ.25 கோடியை அடுத்து மேலும் ரூ.3 கோடி கொடுத்த பிரபல நடிகர்
கரூரில் சாலை போடாமலே போட்டதாக கூறி முறைகேடு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு போலி பணி ஆவணங்களை காட்டி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலை அமைக்காமலே அமைத்தது போன்ற கணக்கை அதிகாரிகள் காட்டி ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.3 கோடி பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அதிமுக புகார் அளித்தது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்னை அயோத்யா மண்டபம் விவகாரம்; போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு!