திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (00:56 IST)

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் , இந்திய பிரதிநிதி யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக கருத்து

Ukraine
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நாவுக்கான இந்திாயவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, "எந்தவொரு ஆயுத மோதல்கள் அல்லது ராணுவ மோதல் நடந்தாலும் அவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். யுக்ரேனில் இருந்து வெளிவரும் தகவல்களில் இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் அகதிகளாகவும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் உள்ளனர்," என்று கூறியுள்ளார்.
 
44 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும், 71 லட்சம் மக்கள் யுக்ரேனுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களையும் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பாதித்துள்ளது என்பதையும் மறந்து விடக்கூடாது.
 
சுமா் 22500 இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இந்தியா உதவியது, அவர்களில் பெரும்பாலோர் யுக்ரேனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.