திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:00 IST)

சென்னை அயோத்யா மண்டபம் விவகாரம்; போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு!

Ayodhya Mandapam
சென்னையில் உள்ள அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை நிர்வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள அயோத்யா மண்டபம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அயோத்யா மண்டபம் யாருக்கும் சொந்தமானது இல்லை என்றும், மண்டபத்தை அறநிலையத்துறை நிர்வகிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று மண்டப நிர்வாக பணிகளுக்காக சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளை பாஜகவினர் மற்றும் சிலர் தடுத்து நிறுத்தியதோடு, மண்டபத்தையும் பூட்டி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 75 பாஜகவினர் மீது அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.