தொடர்புடைய செய்திகள்
- முதல்வருக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்.. 7 தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பா?
- தேர்தலுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ஈபிஎஸ்.. லிஸ்ட் எடுக்க உத்தரவா?
- 2ஆம், 3ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு.. உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
- திமுக தோற்றால் எல்லா மகளிர்களுக்கும் ரூ.1000.. வானதி சீனிவாசன்..!
- ரூ.1000 உதவித்தொகை பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஸ்டாலின் கொடுப்பாரு: கஞ்சா கருப்பு பிரச்சாரம்..!
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு
மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேசன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் ரேசன் அட்டைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஒரு ஆண்டாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததற்கு அவர்கள் மகளிர் உரிமைக்காக கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் காரணமா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
