வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (07:09 IST)

முதல்வருக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்.. 7 தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பா?

Stalin
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என்று கூறப்படும் நிலையில் சில தொகுதிகளில் உள்ளடி வேலைகள் நடந்துள்ளதாகவும் அதனால் ஆறு அல்லது ஏழு தொகுதிகளில் தோல்விகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை ரிப்போர்ட் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது 
 
தனியார் நிறுவனம் நடத்தப்பட்ட சர்வே ரிப்போர்ட் முதல்வருக்கு சென்றுள்ளதாகவும் அதிலும் சில தொகுதிகளில் தோல்விக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சில முக்கிய விஐபி தொகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முதல்வருக்கு சென்றுள்ளதாகவும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொகுதிகளிலும் வேலை சரியாக நடைபெறவில்லை என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாகவும் புறப்படுகிறது. 
 
இதனால் தேர்தல் முடிவு வெளியானவுடன் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் பதவியிலும் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. திமுகவில் மட்டுமின்றி அதிமுக மற்றும் பாஜகவிலும் சில உள்ளடி வேலைகள் நடந்து இருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் இந்த மூன்று கட்சிகளிலும் தேர்தல் நேரத்தில் சரியாக வேலை செய்யாதவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva